யாழ்.அராலியில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம், அராலி பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராலி, மேற்கை சேர்ந்த 71 வயதான கந்தையா நாகசாமியென பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே படுத்துறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை 6 மணியளவில் வீட்டார் வெளியே வந்து பார்த்தபோது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். அத்துடன் சடலத்திற்கு அருகில் கயிறு போன்றன காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இச்சம்பவமானது கொலையாக இருக்கலாமென சந்தேகிக்கும் வட்டுக்கோட்டை பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்