புளியமரத்தில் ஏறிய சிறுவன் விழுந்து படுகாயம்


திருகோணமலை கந்தளாய் பகுதியில் புளியமரத்தில் ஏறிய சிறுவன் ஒருவன் மரத்திலிருந்து தவறி விழுந்து பலத்த காயங்களுடன் கந்தளாய் தள வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜயந்திபுர பகுதியைச் சேர்ந்த ஹசித்த எமஸான் (வயது 15) என்ற சிறுவனே மரத்திலிருந்து விழுந்தவனாவான்.

இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்றுள்ளது.

பாடசாலை விட்டு வீட்டுக்குச் சென்ற குறித்த சிறுவன் நண்பர்களுடன் வீட்டுக்கு அருகாமையிலுள்ள புளிய மரத்தில் புளியம்பழம் பறிக்க ஏறிய போதே வழுக்கி விழுந்ததாகவும் கை மற்றும் கால்கள் உடைந்துள்ளதோடு ஆபத்தான நிலையிலுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்