மோட்டார் சைக்கிளை திருடி இலக்கத் தகடுகளை மாற்றியவர் விளக்கமறியலில்

 

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றினைத் திருடி அதன் இலக்கத் தகடுகளை மாற்றி அதனை செலுத்திய நபர் ஒருவரை இம்மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் சமிலா குமாறி ரத்நாயக்க புதன்கிழமை (4) உத்தரவிட்டார்.

நெய்தல் நகர்,மூதூர் பகுதியைச் சேர்ந் 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் திருகோணமலை பிரதேசத்தில் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடி அதன் இலக்கத்தகடுகளை மாற்றி பாவித்த நிலையிலேயே செவ்வாய்க்கிழமை (3) கிண்ணியா பொலிஸார் போக்குவரத்து கடமையின் போது நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது போலியான இலக்கத்தகடுகள் பாவித்தது தெரியவந்துள்ளதாகவும் சந்தேக நபரை செவ்வாய்க்கிழமை (3) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை பொலிஸார் புதன்கிழமை (4) திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்