துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகில் வீசப்படும் கோழிக்கழிவுகள்

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் உள்ள குளக்கட்டில் மருதமுனை,பெரியநீலாவணை கிராமத்தில் உள்ள கோழிக்கடை உரிமையாளர்களினால் அறுத்த கோழிக்கழிவுகள் இன்று வியாழக்கிழமை(5.7.2018) காலைவேளை வீசப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணைக் கிராமத்தின் பிரதானவீதிகள்,குளக்கட்டுக்களில் மிக நீண்டகாலமாக கோழிக்கடைக்கழிவுகள்,மற்றும் விலங்குங்கழிவுகள்,வீட்டுக்கழிவுகளை உரப்பைகளில் பொதியிடப்பட்டு சூட்சுமமான முறையில் ஆட்டோக்களிலும்,சிறியரக வாகனங்களிலும் வீசிவருகின்றார்கள்.இதுவொரு பாரியதொரு கேவலமான கீழ்த்தரமான செயற்பாடாகும் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயமாக கல்முனை மாநகரசபை மேயர்,களுதாவளை பிரதேச தவிசாளர்,செயலாளர், களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் போன்றோர்கள் காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டுமென துறைநீலாவணை கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்