வவுனியாவில் கரடி தாக்கி இருவர் படுகாயம்

வவுனியாவில், கரடி தாக்­கி­ படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யில் இரு­வர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இரணை இலுப்­பைக்­கு­ளம் பகு­தி­யில் உள்ள வய­லுக்கு நேற்று மாலை 3 மணி­ய­ள­வில் சென்­ற­போது கர­டி­யின் தாக்­கு­த­லுக்கு இலக்­கா­கி­ய­தாக வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்ள இரு­வ­ரும் தெரி­வித்­த­னர்.

காக்­கை­யன்­கு­ளம், இரணை இலுப்பைக்­கு­ளம் பகு­தி­யைச் சேர்ந்த சேனா­ரவி (வயது-40) என்­ப­வ­ரது கண் மற்­றும் தலை­யில் பலத்த காயங்­கள் ஏற்­பட்ட நிலை­யில் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்டு மேல­திக சிகிச்­சைக்­காக கண்டி வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார். மற்­றை­ய­வர் அநு­ரா­த­பு­ரம் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்