மாறுபடும் பேருந்து கட்டணங்கள் -மக்கள் விசனம்

கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபைக்குட்பட்ட திருகோணமலையிலிருந்து மூதூருக்கு பயணிக்கும் தனியார் பஸ் நடத்துநர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான பஸ் கட்டணங்களை அறவிடுவதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலையிலிருந்து மூதூருக்கு நாளாந்தம் செல்லும் தனியார் பஸ்களிலேயே இவ்வாறான முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் முப்பத்தைந்து ரூபாவுக்கு நாற்பது ரூபாவும்,ஐம்பத்திரண்டு ரூபாவுக்கு அறுபது ரூபாவும் அறவிடுவதாகவும் ஒவ்வொரு பஸ் நடாத்துனரும் நினைத்த மாதிரி பணம் அறவிடுவதாக பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிழக்கு மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையில் இவ்வளவுதான் அறவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள போதிலும் கூடுதலான தொகையை அறவிடுவதாகவும்,மிகுதிப்பணம் வழங்கப்படுவதில்லை அதனை பிரயாணிகள் கேட்டால் நடாத்துனர் கடும் தொனியில் பேசுவதாகவும் பிரயாணிகள் தெரிவிக்கின்றனர்.

மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையினால் பஸ் சாரதிக்கும்,நடாத்துனருக்கும் மேலாடைகள் வழங்கப்பட்டுள்ள போதிலும் அதனைக் கூட அணிவதில்லையெனவும் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயத்தில் மாகாண வீதிப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்