மன்னார் பொது வைத்தியசாலையில் விடுதிகள்,உணவகம் திறந்து வைப்பு

 


சுதந்திர சுகாதார சேவையினை வலுப்படுத்தும் நோக்கில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட கொடை நிதியின் கீழ் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ விடுதி,வைத்திய நிபுணர்களுக்கான தங்குமிட விடுதி மற்றும் அமுதம் ஆரோக்கிய உணவகம் ஆகியவை இன்று வியாழக்கிழமை (5) மதியம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் பிரதி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.என்.கில்றோய் பீரிஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக இவற்றை திறந்து வைத்தனர்.

இதன்போது வடமாகாண சபை உறுப்பினர் அலிக்கான் சரீப் , வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் , வைத்தியர்கள், மற்றும் வைத்தியசாலை பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்