சுங்கத்திணைக்களம் மறுசீரமைப்பு – அமைச்சர் மங்கள சமரவீர

சுங்கத் திணைக்களத்தை இந்த வருட இறுதிக்குள் மறுசீரமைக்கப் போவதாக நிதி மற்று ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

காலாவதியான சட்டங்களுக்குப் பதிலாக புதிய சட்டங்கள் தேவைப்படுவதாக பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச்சட்டம் மற்றும் சுங்கக்க கட்டளைச் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விசேட வர்த்தகப் பண்ட வரிச் சட்டத்தின் கீழான எட்டு கட்டளைகள், சுங்க கட்டளைச் சட்டத்தின் கீழான ஐந்து யோசனைகள், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரிச் சட்டத்தின் கீழான கட்டளை, உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கீழான பிரமாணம் போன்றவை அங்கீகரிக்கப்பட்டன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்