அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அக்கிராசனின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு

கிளிநொச்சி அக்கராயன் அம்பலப்பெருமாள் சந்தியில் அக்கிராசனின் திருவுருவச் சிலை திறந்துவைப்பு .
 13ம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை மையமாக வைத்து ஆட்சி செய்த பழந்தமிழ் அக்கிராசனின் திருவுருவச் சிலை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து 5 இலட்சம் ரூபாவும் கரைச்சி பிரதேச சபையின் நிதியில் இருந்து 3 இலட்சத்து  ஐம்பதாயிரம் ரூபா நிதியிலிருந்தும் மொத்தமாக 8 இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட அக்கிராசனின் திருவுருவச் சிலை பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறிதரன் ஆகியோரால் இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்