அசாமில் கொட்டுகிறது மழை- 30 பேர் பலி 40 ஆயிரம் மக்கள் பாதிப்பு

இந்தியாவின், அசாம் மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். 40 ஆயிரம் பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அசாமில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக தலைநகர் நாக்கிப்போர், பார்ப்போட்டை, ஹரிமன் உள்ளிட்ட நகரங்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. இதனால் வீடுகளை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அசாமில் உள்ள மிகப்பெரிய நதியான பிரம்மபுத்திரா நதியில் அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றை அண்டியுள்ள பல மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

மொத்தம் 56 கிராமங்கள் மழை நீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகின. தொடர்ந்து மோசமான நிலைமை நிலவி வருவதனால் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கப்பெறவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்