எரிபொருள் விலையில் மாற்றமில்லை

முன்னர் இருந்த விலைக்கே எரிபொருள் விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் கூறியுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரித்ததுடன், லங்கா ஐஓசி நிறுவனம் இன்று காலை முதல் எரிபொருள் விலையை அதிகரித்தது.

இந்நிலையில் மீண்டும் பழைய விலைக்கே எரிபொருளை விற்பனை செய்யுமாறு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதிகரிக்கப்பட்ட புதிய விலைக்கே எரிபொருள் வழங்க லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்