இலஞ்சம் பெற்ற முகாமையாளருக்கு 40 ஆண்டு சிறை

வீதிப் போக்குவரத்து உரிமம் வழங்குவதற்காக தனியார் பஸ் உரிமையாளர் ஒருவரிடம் இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உள்ளிட்ட 08 குற்றங்களில் குற்றவாளியாக இனம்காணப்பட்ட மேல் மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் முன்னாள் முகாமையாளருக்கு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தண்டனை 05 ஆண்டுகளில் முடிவுறும் வகையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இன்று உத்தரவிட்டார்.

இதுதவிர பிரதிவாதிக்கு 40,000 ரூபா அபராதம் மற்றும் அவர் இலஞ்சமாக பெற்றுக் கொண்ட 10,000 ரூபா தண்டனையாகவும் பெற்றுக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் பஸ் உரிமையாளருக்கு 05 இலட்சம் ரூபா நட்ட ஈடும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்