பல தமிழ்க் கிராமங்களை ஒன்றிணைத்த மாபெரும் சித்தர் ரதபவனி…

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 67வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு ​​ சித்தர் ரதபவனி ஊர்வலமானது வெகு விமர்சையாக பலரது ஆதரவுடனும் பல தமிழ்க் கிராமங்களை இன்றைய தினம் 06ம் திகதி பக்திபூர்வமாக ஒன்றிணைத்திருந்தது.

அந்தவகையில் 06ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7.45 மணியளவில் காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவசமாதி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி காரைதீவு,கல்முனை,கிட்டங்கி,சவளக்கடை,தம்பலவத்தை,13ம் கிராமம்  ஊடாக மண்டூர் கிரமத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து நாவிதன்வெளி,வீரமுனை,சம்மாந்துறை ஊடாக மீண்டும் சுமார் இன்றிரவு 8.00 மணியளவில் காரைதீவை வந்தடைந்தது.

மேற்படி சித்தர் ரத பவனியில் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த சித்தர் பக்தர்கள் உட்பட காரைதீவின் பல பொது அமைப்புக்களும் கலந்துகொண்டிந்தமையினை காணக்கூடியதாக இருந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்