யாழ் இந்துக் கல்லூரிக்கு பெருமை சேர்த்தார் நடேசமூர்த்தி சிவமைந்தன்

யாழ் இந்துக் கல்லூரியின் மாணவன்  நடேசமூர்த்தி சிவமைந்தன் இம் முறை  பல்கேரியாவில் நடைபெற்ற  சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் சாதித்து  வெண்கலப் பதக்கத்தினை பெற்றுள்ளார்.
அத்துடன் இவர் பங்குபற்றிய இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தினை Team work இற்காக பெற்றுக் கொண்டுள்ளது.
அத்துடன் இப் போட்டிக்காக தேசிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னர் இவர்
2013- பிலிப்பைன்ஸ்,
2014- இந்தோனேஷியா,
2015- சீனா என பல முறை சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளுக்குச் சென்று 2 முறை வெண்கல பதக்கமும் 1 முறை வெள்ளி பதக்கமும் வென்றிருந்தார். அத்துடன்  இவர் கல்லூரி சாரணர் செயற்பாடுகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருக்கின்றனை குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்