கரும்புலிகளை அனுஷ்டிக்குமளவுக்கு வடக்கில் நிலைமை படுமோசம்! – பதறுகின்றது மஹிந்த அணி

“கரும்புலிகள் தினத்தை ஆசிரியர்களும், மாணவர்களும் விளக்கேற்றி அனுஷ்டிக்குமளவுக்கு வடக்கில் நிலைமை மோசமடைந்துள்ளது. சட்ட ஆட்சிக்குப் பதிலாக அங்கு அராஜகமே இடம்பெற்றுவருகின்றது” என்று மஹிந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல்வீரவன்ஸ தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பியே இவர் இக்கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கில் தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய கரும்புலிகள் தினம் பகிரங்கமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. படங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஆசிரியர்களும், மாணவர்களும் வெளியேவந்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்துகின்றனர். மறுபுறத்தில் ஆவா குழுவும் தலைதூக்கியுள்ளது. பொலிஸாருக்கு விடுமுறை இரத்துச்செய்யப்பட்டிருந்தாலும் அவர்களால் அங்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட முடியாதுள்ளது.

அதுமட்டுமல்ல, வடக்கில் 25வீதம் படைக்குறைப்பு இடம்பெற்றுள்ளது. இராணுவ முகாம்களும் அகற்றப்பட்டுள்ளன. இவ்வறானதொரு நிலைமையில்தான் புலிகள் மீண்டும் வரவேண்டுமென விஜயகலா கூறியுள்ளார்” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்