மன்னார் பொது வைத்தியசாலைக்கு நிரந்தரமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் நியமனம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாத நிலையில் மக்கள் பல்வேறு அசௌ கரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில்,தற்போது நிரந்தரமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையினால் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையினால் மகப்பேற்றுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார்கள்,மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் இருந்து வவுனியா அல்லது பிறிதொரு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.

இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அம்புலன்ஸ் வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணித்தாய்மார்கள் சிலர் அம்புலன்ஸ் வண்டியிலேயே குழந்தைகளை பிரசவித்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.

இந்த நிலையில் மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணரை நியமிக்ககோரி மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக பல தடைவ மத்திய சுகாதார அமைச்சுக்கு தெரியப்படுத்தியதோடு,தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்தோம்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று,பெண்ணியல் வைத்திய நிபுணர் ஒருவர் தற்போது நிரந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மயக்க மருந்து வழங்கும் வைத்திய நிபுணர் ஒருவர் இன்னும் நியமிக்கப்படாமலேயே இருக்கின்றார்.அவரையும் நிரந்தரமாக நியமிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்