பிரதமர் ரணில் நாளை சிங்கப்பூர் பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் செல்ல உள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற உள்ள 06வது ´சர்வதேச நகரம்´ மாநாடு உள்ளிட்ட சில கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு செல்ல உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் பிரதமர் உள்ளிட்ட அந்த நாட்டின் உயர்மட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட உள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் சர்வதேச நகரம் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் “நகர அபிவிருத்தி மற்றும் சுற்றாடலை பாதுகாப்பும்” என்ற தலைப்பில் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

பிரதமரின் இந்த விஜயத்தில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதி அமைச்சர் அனோமா கமகே ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்