நல்லூரில் காணாமற்போனோரின் உறவுகள் உண்ணாவிரதம்

காணாமற் போனோரின் உறவினர்கள், யாழ். நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று (சனிக்கிழமை) காலை ஆரம்பித்துள்ளனர்.

காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது.

காணாமல் போனோரின் உறவிவினர்கள் வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற சுழற்சிமுறை உண்ணாவிரத போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இப்போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் 108 தேங்காய் உடைக்கப்படவுள்ளதுடன, தீச்சட்டிகளும் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வவுனியா காணாமற்போனோரின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று இடம்பெறும் போராட்டத்திலும், ஆலய வழிபாடுகளிலும், அரசியல்வாதிகள், சமூகத்தில் அக்கறையுள்ள அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்