உடன் அமுலுக்கு வரும் வகையில் தபால்மா அதிபர் இடமாற்றம்

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால்மா அதிபர் ரோஹன அபேரத்தன, ஜனாதிபதி செயலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த இடமாற்றம் தொடர்பில் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

மேலும் தபால்மா அதிபரின் இடமாற்றத்தினால் தபால் திணைக்களத்தில் தற்போது நிலவும் நெருக்கடியான நிலை இன்னும் அதிகரிக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இம்முறை தபால் ஊழியர்கள் இரண்டு வாரங்களுக்கும் அதிகமாக கடந்த மாதம் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அரசாங்கத்திற்கு பில்லியன் கணக்கில் நட்டம் ஏற்பட்ட நிலையில், தபால் துறை குறித்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனையடுத்து தபால்மா அதிபரின் இடமாற்றம் இடம்பெற்றுள்ளமையானது, பல கேள்விகளை தோற்றுவித்துள்ளது.

எனினும், இந்த இடமாற்றத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்