சிறுமி றெஜினா படுகொலையை கண்டித்து புத்தளத்தில் மாணவர்கள் கண்டன போராட்டம்

 

சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் மாணவி றெஜினா படுகொலை செய்யப்பட்டமையை கண்டித்தும் போதைப் பொருள் பாவனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புத்தள த்தில் கண்டனப் போராட்டமும் விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடைபெற்றது.

புத்தளம், கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் மகா வித்தியாலய மாணவர்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பேரணி, பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டு கட்டைக்காடு பகுதிக்கு சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இதன் போது பேரணியில் கலந்துகொண்ட மாணவர்கள் ‘ரெஜினாவின் மரணத்திற்கு சரியான தீர்வு வழங்கப்பட வேண்டும்’, ‘இளைய தலைமுறையினரை போதைப் பொருள் பாவனையில் இருந்து மீட்போம்’,’போதையற்ற உலகுக்கு பாதை அமைப்போம்’, ‘றெஜினாவின் கொலை மன்னிக்கப்பட முடியாது’,’இளைய சமுதாயமே விழித்திடுவீர்’,’மதுவை ஒழித்து விடுவீர்’ போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு பேரணியாக சென்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்