முதன்முதலாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது


இலங்கையில் முதல் முறையாக ஊடகவியலாளர்களுக்கு ஜனாதிபதி விருது வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான விருது வழங்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.

பக்கச்சார்பற்ற நான்கு ஜூரிகள் சபையின் மூலம் விருதை பெறுவதற்கு தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதன் அடிப்படையில் 54 விருதுகள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் மங்கள சமரவீர, இது தொடர்பான விடயங்களை தெரிவித்தார்.

உன்னதமான ஊடகக் கலாசாரத்தை கட்டியெழுப்புவதே இந்த விழாவின் நோக்கம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தொடர்பாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் மங்கள சமரவீர , இந்த செய்தி தொடர்பில் அனைத்து பொறுப்புக்களையும் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை ஏற்றுக் கொண்டிருப்பதாக கூறினார்.

இது தொடர்பில் மேலதிக விபரங்கள் தேவையாயின் அந்த பத்திரிகையின் சிரேஷ்ட ஆசிரியரை தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்