ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற 07 மீனவர்கள் மாயம்

மீன்பிடி நடவடிக்கைக்காக சென்ற ஆழ்கடல் படகு ஒன்று 07 மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது.

கடந்த மாதம் 04ம் திகதி குறித்த மீனவர்கள் காலி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்றுள்ளதுடன், அவர்கள் மீண்டும் திரும்பாததையடுத்து மீட்டியாகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

ஹிக்கடுவ, தெல்வத்தை, தொட்டகமுவ ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 07 பேரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

அவர்கள் கடந்த மாதம் 29ம் திகதி வரை உறவினர்களுடன் தொடர்பில் இருந்துள்ளதுடன், அதன்பின்னர் தொடர்பு இழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மீட்டியாகொட பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்