அரச சட்டங்களால் தொழில் பாதிப்பு -சிறீதரன் எம்.பியிடம் கள் உற்பத்தியாளர்கள் தெரிவிப்பு


அரசாங்க சட்டங்களால் தமது தொழில் பாதிக்கப்படுவதாக பளை பனை தென்னைவள கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனிடம் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பச்சிலைப்பள்ளி பிரதேச அரசியற் பணிமனையில் கள் உற்பத்தியாளர்களை பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் சந்தித்து உரையாடியபோது அவர்கள் தங்கள் ஆதங்கங்களை தெரிவித்தனர்.

அத்துடன் அரசாங்கம் தமது உற்பத்திகள் மீது சில விசேட தினங்களில் தடை விதிப்பதாகவும் இதனால் தமது உற்பத்திகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்ததுடன் தங்களுக்கு போத்தலில் கள் அடைப்பதற்கான அனுமதியை பெற்றுத்தருமாறு வேண்டிக்கொண்டனர்.

இச் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்,பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தலைவர் சு.சுரேன் , உப தவிசாளர் மு.கயன் உறுப்பினர்கள் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களின் கிளிநொச்சி மாவட்ட பேரிணையங்களின் தலைவர் ஸ்ரீகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்