சிறப்புற நடைபெற்ற ஓமந்தை மத்திய கல்லூரி உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடல்

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் க.பொ.த. உயர்தர மாணவர்களின் வருடாந்த ஒன்று கூடல் விழா கல்லூரியின் மாணவன் ப.பிரவீன் தலைமையில் நேற்று (06) மாலை 6.30 மணிக்க ஆரம்பமாகி நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாணத்திற்கான இந்திய உயர்ஸ்தானிகர் எஸ்.பாலச்சந்திரன் கலந்துகொண்டிருந்தார்.

சிறப்பு விருந்தினராக வவுனியா வடக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.

அதிதிகள் மாலை அணிவித்து பான்ட் வாத்தியங்கள் முழங்க அழைத்து வரப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் பழைய மாணவர்களின் நிதிப்பங்களிப்புடன் நிறுவப்பட்ட கணனி மயப்படுத்தப்பட்ட (கரும்பலகை) விசேட வகுப்பறை ஒன்று இந்திய உயர்ஸ்தானிகர் எஸ்.பாலச்சந்திரன் மற்றும் வடக்கு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி அன்னமலர் சுரேந்திரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வரும் விழாவின் தலைவருமான க.தனபாலசிங்கம் அவர்களினால் இந்திய உயர்ஸ்தானிகருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசில் ஒன்றும் வழங்கி வைக்கப்பட்டது.

ஓமந்தை மத்திய கல்லூரியின் மாணவ, மாணவியரின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் இலண்டன் வாழ் பிரபல தொழிலதிபருமான அரசர் வேலுப்பிள்ளை குணரட்ணம் மற்றும் அவரது பாரியார் கு.சாந்தினி ஆகியோருக்கு கல்லூரியின் அதிபரால் நினைவுப் பரிசில் வழங்கி கௌவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் ஓமந்தை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சுரேஸ்த சில்வா, பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், வலயக்கல்வி பணிமனையின் உத்தியோகத்தர்கள், கல்லூரியின் ஆசிரியர்கள் மாணவர்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்