தீவுப்பகுதி மாடு கடத்தல் சூத்திரதாரிகள் சிக்கினர்

தீவுப்பகுதியின் பிரதான சட்டவிரோத கால்நடை கடத்தல் சூத்திரதாரிகள் இருவர் 107 கிலோ மாட்டிறைச்சியுடன் மண்டைதீவு பொலிஸ் நிலைய சோதனைச் சாவடி யில் வைத்து சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

. நீண்டகாலமாகவே மேற்படி சூத்திரதாரிகள் சட்டவிரோதமாக கால்நடை கடத்தல் மற்றும் அவற்றை இறைச்சியாக்குதலில் ஈடுபட்டு வந்திருந்தனர்.

சரவணை , வடக்கு நாரந்தனை , அல்லைப்பிட்டி , வேலணை கிழக்கு போன்ற பகுதிகளில் இவர்கள் கடந்த சில ஆண்டுகளாக தமது கைவரிசையை காட்டியிருந்தனர் . ஏற்கனவே இக்குழுவில் பலர் பொலிஸ் அதிகாரி விவேகானந்தராஜ் தலைமையிலான குழுவினரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

இந்த நபர்கள் இன்று அதிகாலை சரவணைப்பகுதியில் மாடுகளைப் பிடித்து இறைச்சியாக்கி கொண்டுவருவதாக பொலிஸ் அதிகாரி விவேகானந்தராஜ்க்கு கிடைத்த தகவலுக்கமைய சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தி அவர்களை கைதுசெய்ய முற்பட்டபோது அவர்கள் பொலிசாரை தாக்கி விட்டு தப்பிச்சென்ற வேளை அவர்களை பொலிஜார் துரத்தி பிடித்துள்ளனர். கைதான இரு நபர்களும் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்