கிளிநொச்சி சந்தை கழிவுகள் அகற்றப்படவில்லையென வியாபாரிகள் குற்றச்சாட்டு

கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொதுச் சந்தையின் சில பகுதிகளில் வியாபார நிலையங்களின் கழிவுகள் ஒரு வாரமாக அகற்றப்படாது காணப்படுவதாகவும் , கரைச்சி பிரதேச சபையின் சந்தைக்கு பொறுப்பான ஊழியரிடம் தெரிவித்த போதும் நேற்று வெள்ளிக்கிழமை வரை கழிவுகள் அகற்றப்படவில்லை என்றும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

இது தொடர்பில் கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க. கம்சநாதனிடம் தொடர்பு கொண்டு வினவிய போது வியாபாரிகளின் கருத்தில் உண்மையில்லை என்றும் அவ்வாறு ஒரு வாரமாக கழிவுகள் அகற்றப்படவில்லை என்பது பொய்யான தகவல் என்றும். தெரிவித்தார்

இருந்த போதும் வியாபாரிகள் குறிப்பிட்டது போன்று சந்தையின் சில பகுதிகளில் கழிவுப் பொருட்கள் குவிக்கப்பட்டு காணப்படுவதனையும் அவதானிக்க முடிந்தது. அத்தோடு சில சந்தை வியாபாரிகள் பொறுப்பற்ற முறையில் வியாபார நிலைய கழிவுகளை கழிவு வாய்க்காலுக்குள்ளும், சந்தையின் பல இடங்களிலும் எறிந்து விட்டு செல்வது போன்று கழிவுப் பொருட்களை குவித்து வருகின்றனர். கழிவு பொருட்கள் சேகரிக்கும் கூடைகளில் அல்லது ஒதுக்கப்பட்ட இடங்களில் கழிவுப் பொருட்களை கொட்டுவது கிடையாது என்றும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்