கூட்டமைப்பின் போனஸ் ஆசனத்தை வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க கோரிக்கை


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற “போனஸ்” ஆசனங்களில் ஒன்றை முன்னை நாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை (7) காலை 11 மணியளவில்
வவுனியா நகர சபை மண்டபத்தில் ஆரம்பமானது.

தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த கூட்டம் ஆரம்பமாகியது.

குறித்த கூட்டத்தில் ரெலோவின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சிறிகாந்தா,வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன்,மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் உட்பட ரெலோவின் முக்கியஸ்தர்கள், வடக்கு கிழக்கைச் சேர்ந்த கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கலந்து கொண்டிருந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற போனஸ் ஆசனங்களில் ஒன்றை முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கத்திற்கு வழங்க ரெலோ கட்சியின் தலைமை உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்