டிசம்பரில் மாகாணசபைத்தேர்தல்

மாகாண சபை தேர்தலை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைளை முன்னெடுக்குமாறு அனைத்து தரப்புகளுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதனடிப்படையில் இவ்வாரத்தில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்துமாறு சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு அறிவித்தல் விடுத்துள்ளார்.

இதன் போது எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துதல் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும். குறிப்பாக தேர்தல் நடத்தும் முறைமை குறித்து இவ்வாரம் இடம்பெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும்.

இதே வேளை சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவை சந்தித்து டிசம்பரில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை கவனத்தில் கொள்ளுமாறு உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகளுக்கான அமைச்சருக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்