பழமை வாய்ந்த சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்ய நடவடிக்கை

நாட்டில் உள்ள பழைமை வாய்ந்த சிறிய குளக்கட்டமைப்பை சீர் செய்வதற்கான வேலைத்திட்டம் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதற்காக அரசாங்கம் தொள்ளாயிரம் கோடி ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் குளக்கட்டமைப்பில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குளங்கள் உண்டு.

இவற்றை சீர் செய்வதன் மூலம் பெரும்பாலானவற்றின் மூலம் முறையான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். விவசாய அமைச்சின் ஆயிரம் குளங்கள், ஆயிரம் கிராமங்கள் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதியின் கிராமசக்தி வேலைத்திட்டத்தின் ஊடாக குளங்களை சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்