“எமது சூழலை பாதுகாப்போம்” விழிப்புணர்வு பேரணி

சூழல் சீர்கேடுகளை தடுக்கும் முகமாக “எமது சூழலை பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் தலவாக்கலை பெயார்வெல் தோட்டத்தின் ஏற்பாட்டில் இன்று (07.07.2018) லிந்துலையில் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

இப்பேரணி பெயார்வெல் தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு அட்டன் – நுவரெலியா பிரதான வீதியினூடாக லிந்துலை நகரம் வரை சென்றடைந்தது. இப்பேரணியின் போது சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும், சூழலுக்கு பாதுகாப்பான விடயங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி பேரணியை முன்னெடுத்தனர்.

100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதோடு, லிந்துலை பொலிஸாரும், பெயார்வெல் தோட்டத்தின் முகாமையாளர், வைத்தியர், சேவையாளர்கள் என பலரும் இப்பேரணியில் கலந்து சிறப்பித்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்