மட்டக்களப்பில் ஜனாதிபதி

96ஆவது சர்வதேச கூட்டுறவு தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஆரம்பமாகியது.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் அமைச்சர்களான றிஸாத் பதியூதீன், அலிசாஹீர் மௌலானா, ஏ.எல.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு வெபர் மைதானத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு மட்டக்களப்பில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்