கிழக்கு மாகாண உற்பத்தி விற்பனைக்கூடம் திறந்து வைப்பு

கிழக்கு மாகாண தொழிற்துறை திணைக்களத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தினால் “கிரான்ட் வின்டோ” என்ற விற்பனை நிலையம் இன்று (07) கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் நெசவு மற்றும் உள்ளூர் மூலப்பொருட்களை கொண்ட விற்பனை நிலையமாக இது காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண சபையின் 7.5மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டட திறப்பு விழா நிகழ்வில் மாகாண ஆளுநர்,அமைச்சர்கள் எம்.எல்.ஏ.ஹிஸ்புல்லா மற்றும் அலிசாஹிர் மௌலானா பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்