மஸ்தானிற்கு தமிழர் விடுதலைக் கூட்டனி பிரதேச சபை உறுப்பினர் தலைமையில் கௌரவிப்பு

மீள்குடியற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கான கௌரவமளிப்பு நிகழ்வும் மக்கள் சந்திப்பும் நேரியகுளம் கிராம சேவகர் அலுவலக முன்றலில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செட்டிக்குளம் பிரதேசசபை உறுப்பினர் ஜே.டெல்சன் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் வடக்கின் அபிவிருத்தி பிரதி அமைச்சராக பொறுப்பேற்றமைக்காக கே.கே.மஸ்தானிற்கு நேரியகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட வேப்பங்குளம், துட்டுவாகை, நேரியகுளம், அழகாபுரி உள்ளிட்ட ஆறு கிராமங்களை சேர்ந்த கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகளினால் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது இக்கிராம  மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் தொடர்பாக பிரதி அமைச்சர் மக்களுடன் கலந்துரையாடியிருந்மை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் செட்டிக்குளம் பிரதேசசபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோணி, பிரதேசசபை உறுப்பினர் ம.சாந்தகுமாரி, நேரியகுளம் கிராம சேவகர் மு.சிம்சார் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்