தமிழர்களின் இலக்கை அடைய ஒழுக்கம் முக்கியமானது- மாவை எம்.பி

தமிழர்களின் இலக்கை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானது என தமிழரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற 16 ஆவது திருக்குறள் மாநாட்டின் நேற்று(ஞாயிற்றுக்கிழமை)  நடைபெற்ற இரண்டாம் நாள் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “எங்களுடைய விடுதலைக்கு உயிர்கொடுத்தவர்கள், இந்த மண்ணிலே ஒழுக்கமுடன் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காகவே.

ஒழுக்கமுடன் ஒரு போரை நடத்தி் அந்தப் போரிற்கு தங்கள் உயிர்களைக் கொடுத்து தமிழ் மொழியை, கலை கலாசாரங்களை கட்டிக் காத்தவர்கள். எமது இனத்தின் விடுதலையை, உரிமையை வென்றெடுப்பதற்காக அத்தனை உயிர்களும் பறிகொடுக்கப்பட்டன.

நாம், எமது தமிழ் கலாசார விழுமியங்களை தொடர்ந்து பேணிப்பாதுகாக்க வேண்டும். எமது இலக்கை அடைவதற்கு கலாசார விழுமியங்கள் இன்றியமையாதது என்பதை உணரவேண்டும்” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்