இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்றுவிப்பாளர்?

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டிகளுக்கு இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் டெஸ்ட் வீரர் திலான் சமரவீர நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அணியின் முகாமையாளராக கிரஹம் லெப்ரோய் நியமிக்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரின்போது, அணியின் தலைவர் தினேஸ் சந்திமல் பந்தினை மாற்றியமைத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதுத் தொடர்பில் நாளைய தினம் (10) சந்திமல், அணியின் பயிற்றுனர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(ச)

இந்நிலையில் குறித்த மூவருக்கும் ஆறு போட்டிகள் அல்லது ஒரு சில போட்டிகளில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே, புதிய பயிற்றுவிப்பாளர் மற்றும் முகாமையாளர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்