விற்பனைக்காக வைத்திருந்த வல்லப்பட்டையுடன் பேத்தாழையில் ஒருவர் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேத்தாழை பகுதியில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட வல்லப்பட்டையுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 4 கிலோ 405 கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாகரை கஜிவத்தையில் உள்ள காசியப்ப கடல்படையினர் தெரிவித்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விசாரணைகளின் பின்னர் குறித்த சந்தேகநபர் இன்றைய தினம் வாழைச்சேனை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்