பாம்புகள் இருந்த குளத்தில் குதித்து ஜான்வியிடம் காதல் சில்மிஷம் புரிந்த தடக் ஹீரோ : வீடியோ இணைப்பு..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி மற்றும் இஷான் கட்டர் ஆகியோர் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ”தடக்” படத்தின் மூன்றாவது பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

இந்த பாடல் , தடக்கின் ஒரிஜினல் வெர்ஷனான மராத்தி மொழியில் வெளியான யாட் லக்லா என்ற பாடலின் மீள் உருவாக்கமாகும்.

இந்நிலையில், தடக்கை பிரபலப்படுத்தும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜான்வி மற்றும் இஷான் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் அதன் ஒரு பகுதியாக, புனேவில் அந்த பாடலை வெளியிட்டு இருவரும் பேசினர்.

அப்போது பேசிய ஜான்வி.. :-

”இப் பாடலின் படப்பிடிப்பின் போது இஷான் 80 அடி உயரதித்தில் இருந்து பாம்புகள் நிறைந்த குளத்தில் குதித்தார். அப்போது அங்கே ஏராளமான பாம்புகள் இருந்தது தெரிந்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினார்.” என ஜான்வி கூறியுள்ளார்.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்