ஜப்பானில் தொடரும் வெள்ள அனர்த்தம்: பலி எண்ணிக்கை 141 ஆக உயர்வு

ஜப்பானின் மேற்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை குறைந்தது 141ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தில் சிக்கி பலர் காணாமற்போயுள்ள நிலையில், உயிரோடு இருப்பவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆறுகள் வெடிப்பெடுத்ததன் பின்னர் குறித்த பிராந்தியத்திலிருந்து, கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் வௌியேற்றப்பட்டுள்ளனர்.

வௌ்ளத்தினால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்குவதற்காக அதிகாரிகள், பாடசாலைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்களைத் திறந்து வைத்துள்ளனர்.

இராணுவம், தீயணைப்புப் படைவீரர்கள் உள்ளடங்கலாக 70,000க்கும் அதிகமாக மீட்புப் பணியாளர்கள் நிவாரண முயற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜப்பானில் கடந்த 3 தசாப்தத்திற்கும் அதிகமான காலத்தில் கடும் மழையில் சிக்கி அதிகளவானோர் உயிரிழந்த சம்பவம் இதுவாகும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்