புளியங்குளம் ஏ9 வீதியில் கோரவிபத்து: ஐவர் படுகாயம்

வவுனியா, புளியங்குளம்  இராமனூர்  பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற கொன்ரெயினர் ரக வாகனமும், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த ரோசா வானும் ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்