பாடசாலை மாணவியுடன் தவறாக நடக்க முற்பட்ட சிப்பாய்- பொலிஸாருடன் முரண்பட்ட மக்கள்

வவுனியா பேருந்தொன்றில் சென்ற பாடசாலை மாணவியுடன் இராணுவ சிப்பாய் தகாத முறையில் நடக்க முற்பட்ட நிலையில் பேருந்தில் சென்றவர்களால் குறித்த இராணுவ சிப்பாயை பிடித்து குருமன்காட்டில் கடமையில் நின்ற பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனினும் பொலிஸார் இராணுவ சிப்பாயை தப்பிக்க விட்டதாக தெரிவித்து பொலிஸாருடன் பொதுமக்கள் முரண்பட்டனர். இதன் காரணமாக மன்னார் வீதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது.

இந் நிலையில் குறித்த இராணுவ சிப்பாயை பொலிஸில் ஒப்படைத்ததா என கோரி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்நிற்கு முன் கூடியுள்ளனர்

இந் நிலையில் பொலிஸார் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதாக மக்களிடம் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்