வவுனியாவில் ஒரே இரவில் மூன்று வியாபார நிலையங்களில் திருடர்கள் கைவரிசை

வவுனியா குருமன்காட்டுச்சந்தியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்களிலும் சீற்றை பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வியாபார நிலையத்திலிருந்த பணத்தினைத்திருடிச் சென்றுவிட்டதாக வவுனியா குற்றத்தடுப்புப்பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குருமன்காட்டுச்சந்தில் தொடராக அமைந்திருந்த மூன்று வர்த்தக நிலையங்களின் கூரைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது.

பலசரக்கு வியாபார நிலையம், அழகுசாதன பொருட்கள் விற்பனை நிலையம், தொலைத் தொடர்பு நிலையம் ஆகிய மூன்று வர்த்தக நிலையங்களுக்களின் கூரையைப்பிரித்து உள் நுழைந்த திருடர்கள் வர்த்தக நிலையங்களிலிருந்த பணத்தை எடுத்துச் சென்றுவிட்டதாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.

இன்று காலை சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளுக்காக குறித்த மூன்று வர்த்தக நிலைய உரிமையாளர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்