கொழும்பில் திடீரென ஏற்பட்ட அனர்த்தம்! 153 வீடுகளுக்கு பெரும் பாதிப்பு

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று அதிகாலையில் வீசிய பலத்த காற்று காரணமாக 153 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய ஹோமாகம பிரதேசத்தில் 75 வீடுகளும், தெஹிவளையில் 15 வீடுகளும், இரத்மலானையில் 20 வீடுகளும், பிலியந்தலையில் 5 வீடுகளும், மஹரகமயில் 15 வீடுகளும், கெஸ்பேவயில் 15 வீடுகளும், மொரட்டுவையில் 7 வீடுகளும், ஏனைய பிரதேசங்களில் சில வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் ஊடக பேச்சாளர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

அனர்த்த நிலைமை தொடர்பில் ஏதாவது சிக்கல் இருந்தால் 117 இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதிப்பு ஏற்பட்ட வீடுகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் விரைவாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக மத்திய நிலையத்தில் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்