திருகோணமலை நகரசபைக்குள் தலையெடுக்கும் டெங்கு

திருகோணமலை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 184 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளாகியுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெங்கு தொற்று அதிகமாக காணப்படும் பகுதிகளாக உவர்மலை சிவபுரி ஜின்னாநகர் சோனகதெரு கல்லூரி வீதி போன்ற பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

திருகோணமலை அரசடியைச் செர்ந்த 65 வயதடைய முதியவர் ஒருவரே டெங்கு நோய்க்கு பலியாகியுள்ளார்

இந்த நிலையை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார திணைக்களம் மற்றும் திருகோணமலை நகராட்சி மன்றம் கிராமங்களின் சமூக மட்ட அமைப்புக்கள் என்பன வீடு வீடாக சென்று டெங்கு தொடர்பான சோதனைகளை நடாத்தி டெங்கு பெருகக் கூடிய இடங்களை கண்டு பிடித்து அழித்து வருகின்றனர்.

மேலும் சில தினங்களுக்கு முன் பெய்த சிறு மழை காரணமாக கிராமப்புறங்களிலும் டெங்கு நுளம்பு பெருக்கம் காரணமாக மூதூர் தம்பலகாமம் குச்சவெளி போன்ற பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் சிலர் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்