தூக்குத் தண்டனை தீர்மானத்தை நடைமுறைப்படுத்த தயாராகும் ஜனாதிபதி

போதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூக்குத் தண்டனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு பெரும்பாலான அமைச்சர்கள் தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கு தனக்கு வெறுப்புடனாவது இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியதாகவும் சிரேஷ்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்