திருகோணமலையில் தாபரிப்பு பணம் செலுத்தாத சந்தேகநபர்கள் இருவர் கைது

திருகோணமலை மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாக இருந்த சந்தேகநபர்கள் இருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூதூர் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தந்தையொருவர் நான்கு பிள்ளைகளுக்கு இரண்டு மாதங்களாக 16,000 ரூபா தாபரிப்பு பணத்தினை செலுத்தாது தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் தோப்பூர் – நல்லூர், பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் 4 பிள்ளைகளுக்கு மாதாந்தம் 8,000 ரூபா தாபரிப்பு பணம் செலுத்தி வந்த நிலையில் இரண்டு மாதங்களாக தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமறைவாகியதால் மனைவி செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோன்று சேருநுவர பகுதியில் இரண்டு பிள்ளைகளுக்கு நான்கு மாதங்களாக 32,000 ரூபா தாபரிப்பு பணத்தினை செலுத்தாது இருந்த நிலையில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மண்டலபுர, தெஹிவத்தை பகுதியை சேர்ந்த 32 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்