சுரங்க லக்மால் இலங்கை அணி தலைவராக நியமனம்

தென்னாபிரிக்க அணியுடன் அடுத்து நடைபெற உள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு அடுத்து நடைபெற உள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் கலந்து கொள்ள சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தடை விதித்திருந்தது.

இந்நிலையிலேயே அடுத்த இரண்டு போட்டிகளுக்கு தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்