பான்ட் வாத்திய கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு

மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் ஊடாக கண்டி, பல்லேகல விவேகானந்தா தமிழ் வித்தியாலத்துக்கான பௌதிக வளங்களை (பான்ட் வாத்திய கருவிகள்) வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (11.07.2018) அன்று பாடசாலை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் மருதபாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் மதியுகராஜா, கண்டி நகர வர்த்தகர் முத்தையா ஆகியோருடன் கல்விப் பணிமனையின் உத்தியோகத்தர்கள், பாடசாலைஅதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்