இன்று இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்

தாய்லாந்து பிரதமர் பிரியுட் சான்ஓச்சா இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.

இன்று மாலை 5 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை அவர் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கை வரும் தாய்லாந்து பிரதமர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து இரு நாடுகளுக்குமிடையிலான உறவுகள் குறித்து கலந்துரையாடவுள்ளார். அத்துடன் இரு தரப்புகளுக்குமிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையும் கைச்சாத்திடப்படவுள்ளது.

பினனர் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அலரிமாளிகையில் சந்திக்கவுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்