மரணதண்டனை நிறைவேற்றம்- அடுத்துவரும் நாட்களில் முக்கியபேச்சு

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் அடுத்த சில நாட்களில் முக்கிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்த சந்திப்புகள் இடம்பெறவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நிசான் தனசிங்க தெரிவித்துள்ளார்.

மரணதண்டனையை நிறைவேற்றுவது தொடர்பில் பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தூக்குதண்டனையை நிறைவேற்றும் அலுக்கோஸ் பணிக்கு ஆட்களை தேடவேண்டியுள்ளது, என சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற பல நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியுள்ளது இந்த சந்திப்புகளின் போது இது குறித்து ஆராயப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்