இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட தங்கம் பறிமுதல்

மன்னார் நிருபர்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர், தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் நடத்திய தீவிர வேட்டையில் – புதுக்கோட்டை பூதக்குடி சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பேருந்தில் இருந்து நேற்று (12) 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.

குறித்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்ட போது புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த இருவர் கடத்தி வந்த 5.5 கோடி மதிப்பிலான 17.83 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

அதில் 16 கிலோ சுத்த தங்கமும், 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த கடத்தல் தொடர்பாக சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்